
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.
-அன்னை தெரசா

மனமே எல்லாம், நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய் –
கௌதம புத்தர்

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை.
– லாவோ சீ

வெற்றி பெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல. உங்களை தூங்க விடாமல் செய்வது.
– அப்துல் கலாம்

வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.
-டிஸ்ரேலி

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
-அப்துல் கலாம்

வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகதான் இருக்கமுடியும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!
-ஆபிரகாம் லிங்கன்

முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!’
– நேதாஜி

எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை.
– ஔவையார்

கெட்ட உள்நோக்கத்தோடு கூறப்படும் ஒரு உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானதாகும் -சார்லஸ் டூபி பிளேக்

தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
– ஆபிரகாம் லிங்கன்

நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம் முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்.
– காந்தி

அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. – கான்பூசியசு

முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது
-எமர்சன்

கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கிறார்கள்.
– அப்துல் கலாம்

மகிழ்ச்சியை உருவாக்காமல் அதை அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.
– ஹெலன் கெல்லர்

எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
– ஆப்ரகாம் லிங்கன்

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.
– ஹெலன் கெல்லர்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
– அப்துல் கலாம்

கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.
– காந்தி

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.
– ஹெலன் கெல்லர்

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம்.
-கென்னடி

காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!
-லியனார்டோ டாவின்சி

தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்.
– காந்திஜி

நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்.
– நெப்போலியன் ஹில்

கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்
– காந்திஜி

சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.
– நெப்போலியன் ஹில்

உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும்.
-நெப்போலியன்

தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.
– காந்தி

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.
– நெல்சன் மண்டேலா

ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி.
-நைட்டிங்கேல்

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!
– பெரியார்

புகழை மறந்தாலும்… நீ பட்ட அவமானங்களை மறக்காதே. அது இன்னொரு முறை…. உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்.
– அடால்ப் இட்லர்

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது
– ப்ரெமர்

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
– அடால்ப் ஹிட்லர்

எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான்.
-பெரிசியஸ்

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.
– ராபர்ட் கிரீன் இங்கர்சால்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
– சுபாஷ் சந்திர போஸ்

எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்விதான்.
– அடால்ப் இட்லர்

திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.
– தாமஸ் ஆல்வா எடிசன்

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார், ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை.
– சுவாமி விவேகானந்தர்
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிடம் தொடங்கட்டும்.
எல்லா வேலைகளும் கடினமாகத்தான் தோன்றும் முடிக்கும் வரை.
சிரமங்களைக் கடந்தால் தான் சிகரங்களைத் தொட முடியும்.
காயம் இல்லாத வெற்றியில் பெருமை கொள்ள ஏதுமில்லை.
வெற்றி என்றுமே முடிவடையாதது: தோல்வி என்றுமே முடிவாகாது.
முடியும் என்றால் முயற்சி செய்; முடியாது என்றால் பயிற்சி செய்.
வாழ்வில் ஜெயிக்க நண்பர்கள் தேவை. ஆனால், வாழ்நாள் முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தேவை.
உரிமையைக் கொண்டாடும் உறவை விட உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
கஷ்ட்டத்தை நினைத்து கவலைப்பட்டால் கவலையும் நம்மை கஷ்ட்டப்படுத்தும்.
வசதி வரமும் அல்ல ஏழ்மை சாபமும் அல்ல.
தோல்வியைப் பற்றிய பயம் தான் வெற்றிக்கான தடைக்கல்.
வெற்றியின் ரகசியம் ஒரு காரியத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருவது தான்.
வாக்குறுதி என்பது ஒரு கடன் என்பதை மறந்து விடாதே.
உலகத்தில் உள்ள இருட்டு முழுவதும் நினைத்தாலும், ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அணைக்க முடியாது.
உண்மையான வார்த்தை அழகாக இருக்காது. அழகான வார்த்தை உண்மையாகவும் இருக்காது.
வேதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை.
உழைப்பு அடையாத வெற்றியுமில்லை உழைப்பால் அடையாதது வெற்றியுமில்லை.
மாற்றமின்றி முன்னேற்றம் இல்லை.
தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
போதும் என்று நினைப்பவனுக்கு வளர்ச்சி இல்லை. போதும் என்று நினைக்காதவனுக்கு மகிழ்ச்சி இல்லை.
இன்பம் யாருக்கும் சொந்தம் இல்லை. துன்பம் யாருக்கும் நிரந்தரம் இல்லை.
கண்ணுக்குத் தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்குத்தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை.
வாழ்க்கையில் தடுமாறி கொண்டு இருப்பதை விட, ஒரு முறை விழுந்து எழுவது சிறந்தது.
வாழ்க்கையில் இழப்பது தப்பே இல்லை, ஆனால் மற்றவர் வாழ்க்கை நம்மால் இழக்க கூடாது.
யாரை நினைத்தும் கவலைப்படாதே, உன்னுடைய கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும், எனக்கு சொந்தமானவை, அதை வீணாக்க உனக்கு உரிமை இல்லை.
எப்போதும் உன்னோடு இருக்கவே விரும்புகிறேன், உன் கோபத்தால் என்னை தொலைத்து விடாதே!
சிரிக்கும் போது வாழ்க்கையை ரசிக்க முடியும். ஆனால், அழும் போது தான் வாழக்கையை புரிந்துக்கொள்ள முடியும்.